சனி, 31 மார்ச், 2018

என் பார்வையில் -ஓரிதழ்ப்பூ

ஓரிதழ்ப்பூ - எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்

இந்த நாவல் 184 பக்கங்கள் 35 அத்தியாயங்கள் கொண்டவை.

பொருளை தேடி மூச்சு இரைக்கக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்துக்கு மத்தியில் எழுதி கொண்டிருக்கும் திரு. அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கு வணக்கம்.

உங்கள் ஓரிதழ்ப்பூ நாவல் வாசித்தேன். சில பக்கங்களுக்கு மேல் என்னால் கடந்து போக முடியவில்லை
படிப்பதை நிறுத்திவிட்டு என் பணிகளை தொடர்ந்துவிட்டேன்!

இரவு உறக்கம் வரவில்லை! உங்கள் எழுத்து என்னை தட்டி, தட்டி எழுப்பிக்கொண்டே இருந்தது.
மீண்டும், மீண்டும் என்னைவாசிக்க சொன்னது!
மாமுனி போகர், ரவி, அமுதா அக்கா,அவள் புருசன், ரமா அங்கயர்க்கண்ணி,சங்கமேஸ்வரன்மலர்செல்வி,துர்க்கா,சாமிநாதன்,லட்சுமி இந்த காதாபாத்திரத்திற்குள்
மனித உணர்வுகளை, கோடை வெப்ப சலனத்தில் மழை பொழிவதுபோல் பொழிந்து விட்டீர்கள்.

ஓரிதழ்ப்பூவை  வாசிக்கும் போது உங்களுக்கும் எழுத்துக்குமான காதல் சொல்லாமல் புரிகிறது.
உங்கள் எழுத்துப்பணி சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்.

ஒரு வாசகனின் விமர்சனம்.


தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

இந்த ஒரிதழ்ப்பூவை ஒவ்வொரு பக்கமாய் புரட்ட ,புரட்ட வேட்டியும், சேலையும் விலகிக்கொண்டே போனது. இது எனக்கான எழுத்தா ? இல்லை என் தலைமுறைக்கானதா?

பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் இருக்கிறது! அதற்காக கேக்கும் எல்லா வார்த்தைகளையும்
எழுதிவிட முடியாது! அப்படி எழுதிவிட்டால் அது சிறந்த எழுத்து நாகரீகம் ஆகாது! ஒரு எழுத்தாளனுக்கு சமூக சிந்தனை, நாகரீகம், சமூக  பொறுப்பு வேண்டுமா வேண்டாமா?

அனைத்து கெட்ட வார்த்தைகளும் பெண்களைத்தான் குறி வைத்து தாக்குகிறது!
இரண்டு ஆண்கள் வசைபாடுவதாக இருந்தாலும் அவன் அம்மாவிடம் இருந்துதான் தொடங்குகிறார்கள் (குறிப்பாக மாமுனி எது ஓரிதழ்ப்பூ எது என்ற கேள்விக்கு - தூக்கி பார்க்க சொல்லி எழுதியிருப்பீர்கள்)

மனித வாழ்க்கையில் காமமும் , கலவியலும் தேவைதான்!
எல்லா வீட்டிலும் படுக்கையறை இருக்கிறது அது எல்லா நேரமும் திறந்தே இருப்பதில்லை, எல்லா நேரமும் விளக்கு எரிவதும் இல்லை. ஆனால் இந்த ஓரிதழ்ப்பூவில் எல்லாம் திறந்தே இருந்த்து.                                                            
உணர்வுகளின் வெளிப்பாட்டை வாசகர்களின் போக்கிலே விட்டு விடவேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்களின் அங்க உறுப்பினை மிக ஆபாசமாக வர்ணித்திருப்பீர்கள், ஆண்களை ஆபாசமாக எங்கும் வர்ணித்து எழுதுயதில்லை, கலவியல் என்பது இருவருக்கும் பொதுவானது ஆனால் பெண்களை மட்டும் அளவு கடந்து வர்ணிப்பது எந்த வகையில் நியாயம்?
இறந்த வீட்டில் பூ வாடும் முன் பூவை கசங்கி நின்றாள் இது எந்த வகை வேட்கை

எழுத்து என்பது அடுத்த அடுத்த தலைமுறைக்கான அடையாளம்.

இந்த ஓரிதழ்ப்பூவில் அடுத்த தலைமுறைக்கான அடையாளமாக
சீட்டாட்டம் இருந்தது.
குடி இருந்தது.
கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்தது. (அதன் சுவையோடு )
பெண் வன்புணர்வு இருந்தது.
ஆபாச பேச்சு வழக்கு இருந்தது.
பிறமனை நாடுதல் இருந்தது.
அறியாமை இருந்தது.

இந்த ஓரிதழ்ப்பூ காட்டுப்பூ! நிறம் உண்டு மனம் இல்லை! காட்டிலேயே இருக்கட்டும் வீட்டிற்கு வேண்டாத பூ இந்த ஓரிதழ்ப்பூ.

மிக்க நன்றி
உங்கள் வாசகன்

பால்கரசு


கருத்துகள் இல்லை:

குழந்தை வளர்ப்பு

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே வளர விடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் தன் குழந்தைகளை வீட்டை விட்...